Thursday, April 22, 2021

எட்டு வழிச்சாலைக்கு விதித்துள்ள தடை உத்தரவு தொடரும் – உச்சநீதிமன்றம் அதிரடி!!

Must Read

சேலம் மற்றும் சென்னை இடையே அமைய பெற இருந்த எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அந்த தடை உத்தரவு தொடரும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மேல்முறையீடு வழக்கினை நீதிபதிகள் தள்ளுபடியும் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் To சென்னை எட்டு வழிச்சாலை:

தமிழகத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் மற்றும் மாசுகளை குறைக்க சேலம் மற்றும் சென்னையில் எட்டு வழிசாலையினை உருவாக்க சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து இந்த அரசாணைக்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த எட்டு வழிசலைக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு வழங்கினர். அதே போல் இந்த வழக்கினை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதியான கன்வில்கர் தலைமையில் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் தமிழக அரசு சார்பில் இந்த எட்டு வழிச்சாலை வந்தால் போக்குவரத்துக்கு நெரிசல் குறையும் என்றும் அதிகப்படியான மாசு குறையும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதாவது, நிலங்கள் கையகப்படுத்தியதற்கு பின், சுற்றுசூழல் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைக்காவிட்டால் நிலம் வழங்கியோரின் நிலை என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. பல நிலைகளாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

கிடுகிடுவென உயரும் பெட்ரோல் & டீசல் விலை!!

அக்டோபர் 1 ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்கப்படும்? என்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதி கன்வில்கர் கொண்ட அமர்வு இந்த வழக்கிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடரும் என்றும் இந்த மேல்முறையீடு மனுவினை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

குழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ் – “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி!!

குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் அதே சமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் உடலுக்கு வலுவும், டேஸ்டியாக இருக்கும் "மீல் மேக்கர் சில்லி" ரெசிபி எப்படி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -