10 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் பொரியல் – மஹா.,வில் ‘சிவ போஜனம்’ திட்டம்..!

0

இந்திய நாட்டின் குடியரசு தினவிழாவினை முன்னிட்டு நேற்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் ‘சிவ போஜனம்’ மலிவு விலை மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணியில் உத்தவ் தாக்கரே முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். முதல்வரின் சட்டசபை தேர்தல் வெற்றி வாக்குறுதிகளில் மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்தும் விதமாக குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

சிவ போஜனம் திட்டம்

நேற்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் பொரியல் ஆகியவை, பகல், 12:௦௦ முதல், 2:௦௦ மணி வரை வழங்கப்படும். முதல் கட்டமாக, ஒரு உணவகத்தில், 5௦௦ பேர் வீதம் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் மாவட்ட மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்டு உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here