செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மத்திய அரசு அனுமதி!!

0
schools-mask

நாடு முழுவதும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் விருப்பத்தின் பேரில் வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் செப். 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ‘அன்லாக் 4.0’ வழிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. தற்போது பள்ளிகளை செப்டம்பர் 21 முதல் சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே, திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இது 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மாணவர்கள் அரியர் கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி – சென்னை பல்கலை அறிவிப்பு!!

வகுப்பு அறைகளில் மாணவர்களிடையே 6 அடி தூரத்தை பராமரிப்பது கட்டாயமாக இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஊழியர்கள் அறைகள், அலுவலக பகுதி, கேன்டீன், நூலகங்கள் மற்றும் பிற இடங்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், சானிடைசர்கள், அடிக்கடி கை கழுவுதல் போன்றவையும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here