மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் மாஸ்டர். இந்த படத்தை சட்டவிரோதமாக இணைய தளத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாஸ்டர்:

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வழக்கம் போல் தளபதியின் இந்த படத்திற்கான அனைத்து பாடல்களும் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாராக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் வெளிவர தாமதமானது. தற்போது ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் எதிர்பார்த்த வகையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 13ம் தேதி வெளிவரப்போவதாக அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது படக்குழு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

படம் ரிலீஸ் ஆகும் வரை படக்குழுவினர் தினமும் ஓர் அப்டேட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான செவன் கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் உயர் நீதிமன்றத்தில் ஓர் வழக்கை தொடர்ந்துள்ளார். அது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார். தற்போது இந்த வழக்கை தொடர்ந்து உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here