காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் – குணமடைந்த காய்ச்சல்..!

0

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று குணமடைந்தார். இதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

முன்னாள் பிரதமர்:

2004 முதல் 2014ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் எதிர்வினையை ஏற்படுத்தியதால் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

முதலில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் பின்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு நேற்று காய்ச்சல் முழுவதுமாக குணமடைந்தது. கொரோனா சோதனை மேற்கொண்டதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது எனவே அவர் இன்று (மே 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here