இந்த விஷயத்துலயும் மாநாடு தான் டாப்பாம் – படக்குழுவினர் மகிழ்ச்சி!!

0

தியேட்டரின் வெற்றியை தொடர்ந்து மாநாடு திரைப்படம் ஓடிடி தளத்திலும் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் தற்போது OTT தளத்திலும் மாநாடு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாநாடு:

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாபெரும் அளவில் பெரிதாக பேசப்பட்ட மாநாடு திரைப்படம் நவம்பர் 25 அன்று தியேட்டரில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ். ஏ. சந்திரசேகர், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே பல கோடி வசூலை அள்ளியுள்ளது. இந்த திரைப்படத்தில் புதிதாக Time loop முறையை இயக்குனர் கையாண்டுள்ளார் மற்றும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தியேட்டர் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் டிசம்பர் 24 அன்று வெளியாகியது. தியேட்டரில் வெற்றியை கொடுத்தது போலவே ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் லாபத்தை பெற்று தந்து உள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டில் சோனி லைவ்வில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மாநாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here