நாளை முதல் ஜனவரி 2 வரை மாநிலத்தில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!!

0
நாட்டில் அதிகரிக்கும் பதற்ற நிலை - தலைநகரில் அமலான ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!!
நாட்டில் அதிகரிக்கும் பதற்ற நிலை - தலைநகரில் அமலான ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!!

கேரளா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கட்டுப்பாடுகள் அமல் :

இந்தியாவில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிறது. முதலில் ஒன்று, இரண்டு என இருந்து வந்த பாதிப்பு தற்போது கிட்டத்தட்ட 500 ஐ நெருங்கி விட்டது. இதனால் பல மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நம் அண்டை மாநிலமான கேரளாவில், நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை  இரவு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தும், ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 98% பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும், 77 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசின் இந்த உத்தரவு மக்களை அச்சத்தில் உறைய செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here