அதெல்லாம் சுத்த பொய்.., நான் நல்லாத்தான் இருக்கேன்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் கோபி!!

0
அதெல்லாம் சுத்த பொய்.., நான் நல்லாத்தான் இருக்கேன்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் கோபி!!
அதெல்லாம் சுத்த பொய்.., நான் நல்லாத்தான் இருக்கேன்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் கோபி!!

மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தீனா, சமஸ்தானம் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படைப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான “ஐ” படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். சமீபத்தில் கூட விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் பாஜக கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

எல்லாம் போச்சு., முதலில் என் பிள்ளை, அடுத்து என் மனைவி., நித்யானந்தாவின் செயலால் கதறும் ரஞ்சிதா அப்பா!!

இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இணையதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

ஆண்டவன் கிருபையில் நான் நன்றாக உள்ளேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். சொல்லப்போனால் தற்போது நான் கருடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருக்கிறேன். இருந்தாலும் ஏராளமானோர் எனக்கு கால் செய்து விசாரித்தனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here