Tuesday, May 21, 2024

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா – கொரோனா தொற்றால் பலி!!

Must Read

மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா. இவருக்கு வயது 66 ஆன நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார்.

மகாத்மா காந்தி:

மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலை போராட்டத்தில் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திர போராட்ட வீரர். சத்தியாகிரகம் என்றழைக்கப்படும் இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் நாடு விடுதலை பெறவும் முக்கிய காரணமாகவும் அமைத்தது. இதனால் இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்படுவார். இவரது மனைவி பெயர் கஸ்தூரிபாய். இவருக்கு ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ் என்று நான்கு பிள்ளைகள் உள்ளன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மஹாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. இவரது பேரன் சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தார். அவருக்கு உமா, கீர்த்தி மேனன் என்ற இரு சகோதரிகள் உள்ளனர். சதீஷ் துபேலியா, நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 22 மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் சதீஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 21) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -