மகாபாரதத்தில் சகுனிக்கு இப்படி ஒரு பாசிட்டிவ் சைடு இருக்கா??யாருக்குமே தெரியாத முக்கிய ரகசியம்!!

0
மகாபாரதத்தில் சகுனிக்கு இப்படி ஒரு பாசிட்டிவ் சைடு இருக்கா??யாருக்குமே தெரியாத முக்கிய ரகசியம்!!

இதிகாச கதைகளில் ஒன்றான மகாபாரதத்தில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தத்துவங்களும் அடங்கி இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு பெண்ணை தொட்டதால் கௌரவர்களின் குலமே அழிந்தது. மேலும் இதில் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில கதாபாத்திரங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதாவது சகுனி குறித்து நாம் அனைவருக்குமே தெரியும். தனது சமயோஜித புத்தியால் வெற்றி கண்டவர். அதாவது அவருக்கு கௌரவர்களின் வம்சத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு முக்கிய காரணமே பீஷ்மர் தானாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது காந்தாரியை அவரது தந்தை சுபாலன் திருதிராட்டிருக்கு திருமணம் செய்து வைத்தார். கண் தெரியாமல் இருக்கும் திருதிராட்டிரருக்கு பெண் தர யாரும் முன் வராததால் பீஷ்மரே நேரடியாக சென்று சுபாலனிடம் காந்தாரியை பெண் கேட்டிருப்பார். பீஷ்மரை எதிர்த்தால் கண்டிப்பாக காந்தார நாட்டை ஆள முடியாது, சிறைவாசம் தான் என்று நினைத்து இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். இது சகுனிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

ஏனெனில் ஆசையாக வளர்த்த தனது தங்கையை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். இதனால் பீஷ்மர் மீது சகுனிக்கு வன்மம் அதிகரித்தது. அதுமட்டுமின்றி காந்தாரி தனது கணவர் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க மாட்டேன் என்று கூறி கண்ணை கட்டி கொண்டு இருளில் வாழ்ந்தது சகுனிக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு., இதற்கெல்லாம் அனுமதி கிடையாது!!!

இந்த சூழ்நிலையில் தான் காந்தாரிக்கு ஏற்கனவே விவகாரம் நடந்து விட்டதாக பீஷ்மருக்கு செய்தி செல்ல அவரும் கொந்தளித்து சுபாலனிடம் வந்து கேட்கிறார். அவரும் காந்தாரிக்கு தோஷம் இருக்கும் விஷயத்தை சொல்லி அதனால் ஆட்டிற்கு காந்தாரியை திருமணம் முடித்து, அதனை வெட்டி விட்டதாக சொல்கிறார்.இதனால் கோவமடையும் பீஷ்மர் என்னுடைய குலத்திற்கே இழுக்கு விழும்படியாக ஒரு விதவையை மருமகளாக கொண்டு வந்து விட்டோமே என்று கொந்தளிப்பாராம். மேலும் சுபாலனின் குடும்பத்தையே சிறையில் அடைத்து ஒரு பிடி அளவுக்கு உணவும், ஒரு சின்ன குவளையில் தண்ணீர் மட்டும் கொடுக்கும்படியாக உத்தரவிட்டாராம். இதனால் கௌரவர்களின் வம்சத்தை வேரோடு அழிக்க வன்மத்தை வளர்த்துள்ளார். தனது மகனுக்கு மட்டுமே அந்த சாப்பாட்டை கொடுத்துள்ளார். அந்த வம்சத்தை அழிக்க வேண்டும் என்று சொல்லி தான் சகுனியை வளர்த்தாராம். தன் கண் முன்னே தனது தாய் தந்தை பசியோடு இறப்பதை பார்த்து தான் கௌரவர்களின் வம்சத்தை அளிக்க அந்த அளவுக்கு சகுனி வேலையை பார்த்தாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here