சித்திரை திருவிழா: மதுரை மக்களே., கள்ளழகர் மீது தண்ணீர் அடிப்பதற்கு தடை? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

0

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளழகர் வைகை எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை முறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.” எனக் கருத்து தெரிவித்ததோடு எதிர்மனுதாரராக மதுரை மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மாதம் ரூ. 10 லட்சம் சம்பள வேலையை விட்டுட்டோம்.. கோபிநாத் கேட்ட கேள்வி.. பெண் கூறிய பதில் என்ன??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here