கொரோனா பாதித்த முதல் மாநில முதல்வர் குணமடைந்து வீடு திரும்பினார்!!

0

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் இன்று முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

முதல்வருக்கு கொரோனா:

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் இத்தகைய முக்கிய பிரமுகர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படுவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Shivraj Singh
Shivraj Singh Chowhan

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பிற அமைச்சர்கள்!!

கடந்த ஜூலை 25ம் தேதி கொரோனா தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சிவ்ராஜ் சிங் சவுஹான் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதன் பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பல நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்த முதல்வர் இன்று வீடு திரும்பி உள்ளார். அவர் அடுத்த 7 நாட்களுக்கு வீட்டு சுய தனிமையில் இருக்குமாறும், உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here