ஒரே நாளில் சவரன் 798 ரூபாய் உயர்வு – விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை!!

0
Gold
Gold

ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டுவது போல், தங்கத்தின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவு சவரன் 798 ரூபாய் உயர்ந்து உள்ளது.

இன்றைய விலை:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழில்கள் நலிவடைந்து விட்டது. இதனை சரிசெய்ய அரசு பல முயற்சிகளை எடுத்தாலும், பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் ஆபரணம் பக்கம் திரும்பி உள்ளது. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். ஏனெனில் பிற நாடுகளில் முதலீட்டு பொருளாக பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் ஆபரணப் பொருளாக பார்க்கப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gold Purchase
Gold Purchase

அதன் மீதான முதலீடு அதிகரிப்பதால் அதன் விலையும் தொடர்ந்து விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. இவ்வாறு உயர்ந்து கொண்டே சென்றால் சாமானிய மக்களின் நகை வாங்க வேண்டும் என்கிற கனவு, கனவாகவே மட்டும் இருக்கும் என புலம்பி வருகின்றனர்.

லெபனானில் வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்- 73 பேர் பலி!!

இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 99 ரூபாய் அதிகரித்து ரூ.5,301 க்கும், ஒரு சவரன் 798 ரூபாய் உயர்ந்து 42,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 4.6 ரூபாய் அதிகரித்து ரூ.77.70 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here