வெட்டுக்கிளிகளை பிடித்து கோழிக்கு தீவனம் – மாற்றி யோசித்த பாகிஸ்தான் விவசாயிகள்..!

0

2020-ம் ஆண்டின் முதல் பாதியே இப்போதுதான் நிறைவடைகிறது. ஆனால் இந்த ஆறு மாதங்களுக்குள் உலகமே ஏகப்பட்ட சவால்களையம் பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளது. கொரோனாவுக்கு அடுத்து இப்போது உருவாகியிருக்கும் அடுத்த சிக்கல் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கொரோனா வைரஸ், வட இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை, உம்பான் புயல், எல்லையில் சீனாவுடனான பதற்ற நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் பதம்பார்த்து வருகின்றன.

30 ஆண்டுகளில் இல்லாத வெட்டுக்கிளிகள்

30 ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்  தெரிவிக்கின்றன,இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்கொண்டுள்ளன.இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் என ஒரு ஆச்சர்யம் என்றால் பயிர்களை நாசம் செய்யும்  வெட்டுக் கிளிகளை பாகிஸ்தான் விவசாயிகள் வலை வீசிப் பிடித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் விவசாயிகளின் சிந்தனை

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் தான் முதலில் வெட்டுக் கிளி படையெடுப்பு இருந்தது..இதனால் வரும்  ஜூன் மற்றும் ஜூலையில் மிகப் பெரியஅளவில் படையெடுப்பு இருக்கும் என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண பயிர்ப் பாதுகாப்பு துறையின் இயக்குநர் தாரிக் கான் எச்சரித்துள்ளார்.எனவே படையெடுத்து வந்து பயிர்களைக் கொத்தித் தின்று நாசம் செய்யும் வெட்டுக் கிளிகளை பாக்கிஸ்தான் விவசாயிகள் வலையை வைத்து வளைத்து வளைத்துப் பிடித்து வருகின்றனர்.

பிடித்தவற்றைஉள்ளூர் கோழித் தீவன ஆலைகளுக்கு விற்கின்றனர். அங்கு வெட்டுக்கிளிகள் கோழித் தீவனமாக மாற்றப்படுகிறது. இந்த வெட்டுக் கிளி தீவனத்தை பாகிஸ்தான் கோழிகள் நன்றாக உண்ணுகின்றனவாம். பாகிஸ்தானின் ஓகரா மாவட்டத்தில் இதை அதிகாரிகள் சோதனை ரீதியாக செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர். நல்ல வரவேற்பும் நல்ல சான்றும் கிடைத்துள்ளது.

இரவில் பிடிப்பதுதான் சுலபம்

பகல் நேரத்தில்தான் வெட்டுக்கிளிகள் சுறுசுறுப்பாக இருக்குமாம். இரவில் மரங்களில் அடைக்கலம் புகுந்து அசைவே இல்லாமல் அப்படியே காலை வரை தங்கியிருக்குமாம். அந்த சமயத்தில்தான் வெட்டுக்கிளிகளை பிடிக்க வேண்டுமாம். அதுதான் எளிதானதும் கூட. எனவே இரவெல்லாம் விவசாயிகள் வெட்டுக் கிளிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து தற்போது அந்த ஊரில் வெட்டுக் கிளிகளின் எண்ணிக்கையை அடியோடு குறைத்து விட்டனராம்.ஒரு நாள் முழுவதும் பிடித்தால் 7 டன் வெட்டுக்கிளிகள் பிடிக்க முடியுமாம். அதை விற்றால் ஒரு விவசாயிக்கு குறைந்தது ரூ. 20,000 வரை பணம் கிடைக்குமாம். பாகிஸ்தானில் இப்போது வெட்டுக் கிளி தீவணம் படு பிரபலமாகியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here