ஆகஸ்ட் 6 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0

கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள காரணத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒன்பது நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு நாள் முழு ஊரடங்கு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வந்தது, தற்போது மாநில தலைநகர் ராய்ப்பூர் உட்பட பல மாவட்டங்களில் இது நடைமுறையில் உள்ளது.

முழு ஊரடங்கு:

சத்தீஸ்கரில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநிலத்தின் மோசமான COVID-19 பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஊரடங்கு ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாநில தலைநகர் ராய்ப்பூர் உட்பட பல மாவட்டங்களில் தற்போது ஏழு நாள் முழு ஊரடங்கு நடந்து வருகிறது. இது ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வந்து ஜூலை 28 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டது. COVID-19 காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மாநில அமைச்சரவை தனது கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது என்று அமைச்சர் ரவீந்திர சவுபே இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு என்னவென்றால், சத்தீஸ்கரில் ஊரடங்கு முடிவடைய திட்டமிடப்பட்ட நாளிலிருந்து, அதாவது ஜூலை 28 முதல் மேலும் ஒன்பது நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அங்கு 7,489 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here