ஸ்பைசியான “பாஸ்தா” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0
pasta recipe tamil
pasta recipe tamil

லாக் டவுன், என்பதால் பலரும் ரெஸ்டாரண்ட் இல் செய்யும் ஸ்பைசி ஆன உணவுகளை யார் செய்து தருவறைகள் என்று ஏங்கி போய் இருக்கிறீர்களா. அதிலும் சிலர் பாஸ்தா நூடுல்ஸ் போன்ற உணவுகளை ரொம்பவே மிஸ் செய்வார்கள். அவர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

  • பாஸ்தா – 200 கிராம்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • தனி மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • வெங்காய தாள் – 2 (பொடியாக நறுக்கியது)
இவ்ளோ தான் தேவையான பொருட்கள்..

செய்முறை:

  • முதலில், பாஸ்தாவை தனியாக ஒரு பாத்திரத்தில், 3 கப் தண்ணீர் விட்டு 200 கிராம் பாஸ்தாவை வேகா வைக்கவும், இதனை செய்யும் பொது கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கொண்டால், பாஸ்தா பொலுபொழு என்று இருக்கும்.
  • இது ஒரு பக்கம் தயாராகும் போது, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கொண்டு காயா விடவும், பிப்பு அதில் வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், இதில் தக்காளியை அரைத்து கூட போடலாம்.
  • இது நன்கு வதங்கியதும், பாஸ்தாவை இதில் போட வேண்டும், நன்றாக கிண்டிவிடவும் , அதோடு தான் மசாலா ஒட்டும், இப்பொது தனி மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்ந்து கிண்டவும்.
  • கடைசியாக, வெங்காய தாள் சேர்த்து இறக்கவும்.
ஸ்பைசியான பாஸ்தா ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here