ஆன்லைன் மூலமாக ஆதார் எண் வாக்காளர் அட்டையுடன் இணைப்பு – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

0
ஆன்லைன் மூலமாக ஆதார் எண் வாக்காளர் அட்டையுடன் இணைப்பு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஆன்லைன் மூலமாக ஆதார் எண் வாக்காளர் அட்டையுடன் இணைப்பு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் தூய்மையாக்கும் நோக்கில் ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையை இணைப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையுடன் ஆதாரை எப்படி இணைக்கலாம் என்பது பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆதார் இணைப்பு:

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையை தற்போது வாக்காளர் அட்டையுடன் இணைப்பது கட்டாயம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் இருப்பதாக புகார் வந்துள்ளது. அதன்படி இரட்டை வாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் தூய்மையாக்குவதே இந்த பணியின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் இது குறித்து சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியது, மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். இதனை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கும் 6பி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். அல்லது www.nvsp.in இணையதளம் மூலம் அல்லது VOTER HELP LINE செயலி மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையங்களை அணுகியும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here