விவாகரத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் படிப்படியாக ஏற்படும் மாற்றம் – வைரலாகும் நியூஸ்!!

0

சினிமாவில் பல வித்தியாசமான கதை தளங்களில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் போராளியாக தோற்றமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்:

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று சினிமா துறையில் நடித்து பிசியாக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அதற்கு பின் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். கடந்த சில வருடங்களாக நடிகர் தனுஷ் வித்தியாசமான கதையம்சம்களை தேர்தெடுத்து நடித்திருக்கிறார்.

என்னதான் ரீல் வாழ்க்கையில் ஆல் ரவுண்டராக வலம் வந்தாலும் இவரின் ரியல் வாழ்க்கை சோகத்தில் தான் உள்ளது. இவருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் விவாகரத்து செய்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

இந்த சோகத்திலும் தேசிய விருது பெற்றும் மற்றும் அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி என்ற மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து நிஜத்தில் நடந்த ஒரு போராளியின் கதையில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!

இந்நிலையில் கேப்டன் மில்லர் என்பவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதன்மை படையான கரும்புலி என்ற பிரிவின் கீழ் நாட்டுப்பற்றுடன் ஈடுபட்டவர். தன் 240 கரும்புலிகளுக்கு முன்னால் சென்று தைரியமாக நின்று வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக் வண்டியை செலுத்தி வெடிக்க வைத்து அவரும் இறந்துவிடுகிறார்.

ஒரு ராணுவத் தளத்தை அவர்கள் கண் முன் அழித்து தானும் இருந்ததால் அவருக்கு கப்டன் மில்லர் என் மக்களால் அழைக்கப்பட்டார். இந்த கதையை மையமாக வைத்து சாணிக்காகிதம் இயக்கிய இயக்குனர் தனுஷை வைத்து இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மனைவியிடம் இருந்து தள்ளி இருக்கும் சோகத்தில் இருந்தாலும் வெளியாகும் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here