தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்

ஊதிய உயர்வு:

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. அதாவது, இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட 66 போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவசங்கர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என அறிவித்துள்ளார். அதாவது, ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகாலமாக உயர்த்தக் கூடாது என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைக்கு நிதித் துறையின் ஒப்புதல் வேண்டும் என்பதால் இதற்கான ஒப்புதல் இன்று வழங்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டாலும் பல கோரிக்கைகள் வரவேற்கப்பட்டுள்ளன. இதனிடையே, போக்குவரத்து துறை ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவது குறித்து நிதி சூழல் காரணமாக நீண்ட விவாதத்துக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 99% வரைக்கும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி பின்பு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here