‘லியோ’ படப்பிடிப்பு சென்னையில் எப்போது?..,நடன இயக்குனர் தினேஷ் தகவல்….,

0
'லியோ' படப்பிடிப்பு சென்னையில் எப்போது?..,நடன இயக்குனர் தினேஷ் தகவல்....,
'லியோ' படப்பிடிப்பு சென்னையில் எப்போது?..,நடன இயக்குனர் தினேஷ் தகவல்....,

நடிகர் விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

லியோ படப்பிடிப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘லியோ’. ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜய் ஐந்தாவது முறையாக த்ரிஷாவுடன் ஜோடி சேரும் இந்த படம் எப்படி இருக்கும் என்பதைக் காண்பதற்கும் பலர் ஆர்வமாக உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

‘தசரா’ கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்…., வைரலாகும் புகைப்படம்….,

கடந்த ஆண்டு துவங்கிய ‘லியோ’ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் கடும் குளிருக்கு இடையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படக்குழுவினர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், காஷ்மீரில் நடைபெற்று வந்த ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாகவும், தொடர்ந்து அடுத்த மாதம் முதல் சென்னையில் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்குவதாகவும் நடன இயக்குனர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here