தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் – பிப்ரவரி 25 முதல் தொடங்குவதாக சபாநாயகர் அறிவிப்பு!!

0

இன்று தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சட்டசபையில் கூட்டத்தொடர் நடைபெரும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சட்டசபை:

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி அன்று முதன் முதலாக கூடியது. அந்த தொடர் 3 நாட்கள் நடைபெற்றது. தற்போது அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழகத்தின் துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆன ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார். மேலும் இதில் விவசாயிகள் பயன் பெரும் வகையில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு வீடு பெறுவதற்கான நிதியுதவி திட்டமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பட்ஜெட் தாக்கல் முடிவு பெற்ற நிலையில் இதனை பற்றி எந்த நாளில் விவாதம் நடைபெறும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கோவை மெட்ரோ முதல் துறை மேம்பாடுகள் நிதி ஒதுக்கீடு வரை’ – இடைக்கால பட்ஜெட் முழு விபரம்!!

இதனை சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதைத்தொடர்ந்து வருகிற 25 மற்றும் 26ம் தேதிகளில் பட்ஜெட் பற்றிய விவாதம் நடைபெறும். மேலும் கடைசி நாள் அன்று எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு துணை முதல்வர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர்க்கு பின்பு மறைந்த சித்த வைத்தியர் சிவராஜுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here