சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!!

0

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை “மனுதாரர் விரும்பவில்லையெனில் செய்திகளை பார்க்காமல் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

சமஸ்கிருத செய்திகள்:

மதுரை அண்ணா நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர் “பொதுமக்களுக்கு சேவை செய்ய கடந்த 1997ல் உருவாக்கப்பட்ட பிரசார்பாரதியின் தொடர்ச்சியாக பொதிகை சேனலும் செயல்பட துவங்கியது. தமிழகத்தில் மொத்தமே 803 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுபவர்களாக உள்ள நிலையில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்காக தினமும் கால் மணி நேரம் (மாலை 7-7.15) ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

5 ஏக்கர் நிலப்பரப்பில் அயோத்தியில் பாபர் மசூதி – கட்டிடப் பணிகள் ஜனவரி 26ல் துவக்கம்!!

தொடர்ந்து அவர் , “தமிழகத்தை விட அதிகமாக சமஸ்கிருதம் பேசுவோர் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ள நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமஸ்கிருத மொழியை முன்னிலைப்படுத்துவதை ஏற்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

கேசுவல் போஸில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

மேலும் அவர், “அரசியலமைப்பின் 8வது அட்டவணைப்படி அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் மத்திய அரசு சமமான பங்களிப்பினை வழங்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மட்டும் 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் சமஸ்கிருதத்தை விட பழமையான தமிழ் மொழிக்கு போதுமான நிதி வழங்கப்படவில்லை. எனவே சம்ஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் “மனுதாரருக்கு தேவையில்லையெனில் தொலைக்காட்சியை அணைத்து வைக்கலாம் அல்லது சேனலை மாற்றிக் கொள்ளலாம் எனவும் இதைவிட முக்கியமான பிரச்சினைகள் நிறைய உள்ளன எனவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here