கேசுவல் போஸில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும், அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருந்து வந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது தான் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னணி நடிகை காஜல்:

தமிழ் திரையுலகில் பல நடிகைகள் வந்து போய் உள்ளனர். ஆனால், சிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை தக்க வைத்து கொள்வர். அப்படி அனைவருக்கும் பிடித்த நடிகை என்றால் அது, காஜல் அகர்வால் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பரத்துடன் இணைத்து தனது முதல் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு ரசிகர்கள் மனதினை தொடவில்லை. இதற்க்கு அடுத்தும் சில தமிழ் படங்களில் நடித்தார். அதுவும் அவருக்கு அவ்வளவாக பெயரினை எடுத்து தரவில்லை.

‘இது எங்களின் வெற்றி’ – பிக்பாஸ் வின்னர் ஆரிக்கு சனம் ஷெட்டி வாழ்த்து!!

இதனை அடுத்து அவர் தெலுங்கு படமான “மஹதீரா” படத்தில் நடித்தார். அந்த படம் அவர் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியினை அவருக்கு வழங்கியது. இதனை அடுத்து அந்த படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. அதன் பிறகு பல வெற்றி படங்களை காஜல் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தான் அவர் பிரபல தொழிலதிபரான கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு, அனைவரும் வியக்கும்படி மாலத்தீவிற்கு சென்று தனது ஹனிமூனை கொண்டாடினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் தற்போது வெகு கேசுவலாக இருக்கும் தனது புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த அனைவரும் வாய் அடைத்து போய் உள்ளனர். காரணம், ஒரு மிகவும் சிம்பிளாக அந்த புகைப்படத்தில் இவர் உள்ளார். வெறும் ஒரு டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here