சச்சினை பிரேக் பண்ண காத்திருக்கும் விராட்.., ஆஸ்திரேலிய வீரர் கூறிய தகவல்!!

0
சச்சினை பிரேக் பண்ண காத்திருக்கும் விராட்.., ஆஸ்திரேலிய வீரர் கூறிய தகவல்!!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடிப்பார் என ஆஸ்திரேலிய வீரர் கூறியுள்ளார்.

விராட் கோலி

சர்வதேச தொடர்களின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த மூன்று வருடங்களுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் தனது 71 வது சதத்தை பதிவு செய்தார். இதனால் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விராட் கோலி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் 100 சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட தோல்வி.., ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.., சோகத்தில் ரசிகர்கள்!!

இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 71 வது சதத்துடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் சச்சின் சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதனால் விராட் கோலி இனி வரும் போட்டிகளில் சதம் விளாசி சச்சினின் சாதனையை முறியடிக்கலாம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here