ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட தோல்வி.., ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.., சோகத்தில் ரசிகர்கள்!!

0
ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட தோல்வி.., ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.., சோகத்தில் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ரோஹித் சர்மா தான் காரணம் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்திய அணியின் தோல்வி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி T20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை கைப்பற்றி வந்ததால் பலரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் இந்த பாராட்டுக்கள் அனைத்திற்கும் ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதாவது ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித்தின் கேப்டன்சி தான் காரணம் என கூறி வருகின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் ஏதோ புது முயற்சியை மேற்கொள்வதாக கூறி வீரர்களை மிகவும் சிரமப் படுத்துகிறார்.

அதிக சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வீரருக்கு Hi சொன்ன ரோஹித்.., நீங்க உண்மையிலே பெரிய ஆளுதான்!!

அதன்படி நேற்றைய போட்டியில் கூட தேவையின்றி தினேஷ் கார்த்திக்-ஐ ஸ்டம்பிற்கு அருகில் நிற்க வைத்ததால், புவனேஷ் குமாரால் சரியாக பந்து வீச முடியவில்லை. இதை என்னால் சரியாக பண்ண முடியவில்லை என புவனேஷ் கூறியும் ரோஹித் கண்டுகொள்ளவில்லை. இதனால் இவரது கேப்டன்சி சரியில்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here