பாரதி கண்ணம்மா சீரியல் கடைசி திக் திக் நிமிடங்கள்.., பாரதி பிழைப்பாரா?? மாட்டாரா?? வெளியான புதிய ட்விஸ்ட்!!

0
பாரதி கண்ணம்மா சீரியல் கடைசி திக் திக் நிமிடங்கள்.., பாரதி பிழைப்பாரா?? மாட்டாரா?? வெளியான புதிய ட்விஸ்ட்!!

பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆபத்தில் இருக்கும் பாரதியை கண்ணம்மா காப்பாற்றுவாரா? என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சில வாரங்களாக சூடுபிடித்துள்ளது. அதாவது சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஆக்சன் காட்சிகள் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. அதாவது தீவிரவாதிகளின் பிடியில் இருந்தவர்கள் அனைவரையும் போலீசார் வெற்றிகரமாக மீட்டெடுத்தனர். மேலும் லட்சுமி மற்றும் ஹேமாவும் காப்பாற்றப்பட்டனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இருப்பினும் மற்றொரு பக்கம், பாரதி மனித வெடிகுண்டாக மாற்றப்பட்டு ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கண்ணம்மா, தனது கணவர் பாரதியை காப்பாற்ற தேடி அலைகிறார். அப்போது பாரதி அறையில் கட்டப்பட்டு இருப்பதை பார்க்கிறார், அந்த சமயத்தில் பாரதி கண்ணம்மா விடம், என் உடம்பில் வெடிகுண்டு இருக்கு நீ வெளியே போ கண்ணம்மா என்று சொல்ல, நீங்க இல்லாம என்னால போக முடியாது இரண்டு பேரும் வெளியே போவோம் இல்லனா இங்கேயே செத்துப் போவோம் என கண்ணம்மா அவரை கட்டிப்பிடித்து அழுகிறார்.

பிக் பாஸ் 6ல் என்ட்ரியாகும் ரவுடி பேபி – என்னங்க., இப்படி அதிரடி பிரபலமா களத்துல இறங்குறாங்க?

இந்நிலையில் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் செய்து, பாரதியை காப்பாற்ற வேண்டும் பக்கத்தில் இருக்கும் போலீசிடம் போனை கொடுக்க சொல்கிறார். பின்னர் போலீஸ் கண்ணம்மாவிடம் வெடிகுண்டின் ஒயரை கட் செய்வதற்கு ஐடியா கொடுக்கின்றனர். இந்த சமயத்தில் கண்ணம்மா சரியான ஒயரை கட் செய்து பாரதியை காப்பாற்றுவாரா? வேறொரு இடத்தில் அகிலனும் ஆபத்தில் உள்ளார் அவரையும் கண்ணம்மா எப்படி காப்பாற்றுவார்? இதையடுத்து பாரதி காப்பற்றப்பட்டால் கண்ணம்மாவும், பாரதியும் சேர்ந்து விடுவார்களா? என்று பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here