கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை – ஆட்சியர் அறிவிப்பு!!

0

புரவி புயலின் தாக்கத்தால் கொடைக்கானலில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாகன போக்குவரத்திற்கு தடை:

திண்டுக்கல்லில் புரெவி புயலின் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடைக்கானல் மலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல இன்று மாலை 7 மணி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரவி புயல் நேற்று இரவு திரிகோணமலையில் கரையை கடந்துள்ளது. புரெவி புயல் பாம்பன் கிழக்கு பகுதியில் இருந்து 80 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கொடைக்கானல் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மலை பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை வாகன போக்குவரத்து செயல்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல்!!

மணிக்கு 14 கி.மீ வேகத்தில் இந்த புரெவி புயல் நகர்வதால் ராமேஸ்வர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த புரெவி புயல் பாம்பன் வழியாக கரையை கடக்கும் போது காற்றின் கோரத்தாண்டம் அதிகமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here