இந்தியாவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் – சேலம் மகளிர் காவல் நிலையம் சாதனை!!

0

இந்தியாவிலேயே மிக சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையம் இரண்டாம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

காவல் நிலையங்கள் பட்டியல்:

ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் 10 காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியல் காவல் நிலையத்தின் செயல்பாடு மற்றும் இதர 20 அம்சங்களின் அடிப்படியில் தேர்வு செய்யப்படுகிறது. அப்படியாக இந்த ஆண்டு தேர்வு செய்யபட்ட 10 சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு எதிரான நடத்த அநீதிகள் மற்றும் சொத்து பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டதாக இந்த பட்டியலில் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

விண்ணைத்தொடும் தங்கத்தின் விலை!!

ஏற்கனவே, கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் காவல் நிலையங்கள் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடத்தை மணிப்பூர் மாநிலத்தின் நோங்போக்செக்மை காவல் நிலையம் பிடித்துள்ளது. இந்த பட்டியல் நாட்டில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை ஊக்குவிப்பதற்காகவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையினை ஏற்படுத்துவதற்காகவும் வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here