அருக்காணி வேடத்தில் அஸ்வினிடம் ஜொள்ளுவிடும் ஷிவாங்கி – களைகட்டும் ‘குக் வித் கோமாளி 2’!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2வில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பல ஆர்பாட்டங்களுடனும், கலகலப்பாகவும் பாரம்பரிய சுற்று நடந்துள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோ என்றாலே அது செம ஹிட் தான். அப்படி எதார்த்தமாக எடுக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. ஏற்கனவே விஜய் டிவியில் ‘கிட்சன் கில்லாடிகள்’ நிகழ்ச்சி பிரபலமான ஒன்று. அதுவே டிஆர்பியை ஏத்திவிட்டது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சில காலமாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருந்தது. கடந்த வருடம் வித்தியாசமான முறையில் ஆரம்பிப்போமே என்று தொடங்கப்பட்ட நிகழ்ச்சி செம ஹிட். பாலா, புகழ், ஷிவாங்கி என பலரும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய பக்கபலம் என்றே சொல்லலாம்.  அவர் ஷிவாங்கியின் அந்த எதார்த்தமான நடவடிக்கையும் புகழின் காமெடியும் மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் தான் ரேகா மற்றும் ரம்யாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி முதல் சீசன் ஏக வரவேற்பு பெற்றது.

உச்சகட்ட கவர்ச்சியில் இடுப்பழகை காட்டிய அனிகா சுரேந்தர்

மக்களின் எதிர்பார்ப்புக்கு பிறகு தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனும் கலைக்கட்டியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த சீசனில் சகிலா வேறு வந்துள்ளார் சொல்லவா வேண்டும். போன வாரம் அஸ்வின் வராதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக ஷிவாங்கிக்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அவர் வரமாட்டாரா என்று ஏங்கி கிடந்தவர்களுக்கு இந்த வாரம் அவரின் என்ட்ரி செம மாஸ் என்றே சொல்லலாம். இந்த வாரமும் ஷிவானியுடன் தான் ஜோடி சேருகிறார். இந்த வாரம் பாரம்பரிய சுற்று நடக்கவுள்ளது. அதாவது பழைய காலங்களில் பயன்படுத்திய பொருட்களை வைத்து சமைக்க வேண்டும்.

மேலும் குக் வேறு கண்ணை கட்டிக்கொள்ள வேண்டும். ஷிவானி இந்த வாரத்தில் அருக்காணி போல வேடமணிந்து உள்ளார். கிராமத்து ஸ்டைலில் அஸ்வினை மாமா என்று அழைக்க அஸ்வின் ஆடியே போய்விட்டார். இவ்வாறு பல கலாட்டாக்களுடன் குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here