MAY I COME IN – கே.ஜி.எப் 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

0

நாம் அனைவரும் அதிகளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் கேஜிஎப் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎப் இமாலய வெற்றி..!

கேஜிஎப் திரைப்படம் 2018 இல் வெளியானது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு , கன்னடம், ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து இப்படத்தை ஜப்பான், கொரியா போன்ற அயல்நாடுகளுக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் 2 அதிகளவு பொருட்செலவில் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் வில்லனான சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை கூடியுள்ளது. தற்போது இப்படம் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அதற்கான பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here