ஐபிஎல் 2020 கோப்பை இந்த அணிக்கு தான் – கெவின் பீட்டர்சன் கணிப்பு!!

0
Delhi Daredevils cricketer Kevian Pietersen plays a shot during a Group A match against the Kalkata Knight Riders in the Champions League T20 (CLT20) at the Super Sports Park in Centurion on October 13, 2012. AFP PHOTO / ALEXANDER JOE (Photo credit should read ALEXANDER JOE/AFP/GettyImages)

பல்வேறு தடைகளுக்கு பிறகு செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது ஐபிஎல் தொடரின் 13வது சீசன். இம்முறை எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், கெவின் பீட்டர்சன் தனது கணிப்பை கூறியுள்ளார். அவரது கருத்துப்படி இம்முறை சென்னையோ அல்லது மும்பையோ கோப்பையை கைப்பற்ற போவதில்லை.

ஐபிஎல் 2020:

ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக பங்கேற்க இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வந்துள்ளார். 40 வயதான இவர் சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் வர்ணனையாளராக இருந்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு வந்துள்ளார் பீட்டர்சன்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கெவின் பீட்டர்சன் இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் 2020 கோப்பையை எந்த அணி வெல்லும் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2020 கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளார். பலமுறை கோப்பைகள் வென்ற சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகளை கூறாமல் டெல்லியை குறிப்பிட்டது ஏன் என ரசிகர்கள் குழம்பிப் போயினர். ஏனெனில் அவர் கடந்த சீசன்களில் டெல்லி அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வெல்லாத மூன்று அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ். கடந்த சீசனில் 3ம் இடத்தை பிடித்த டெல்லி அணி இம்முறை இளம் வீரர்களுடன் களம் இறங்குவதால் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 20ம் தேதி முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொள்ளும்.

டெல்லி கேபிடல்ஸ் அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், அக்சர் படேல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரபாடா, அமித் மிஸ்ரா, அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், பிருத்வி ஷேல் , சந்தீப் லமிச்சானே, இஷாந்த் சர்மா, அவேஷ் கான், கீமோ பால், மோஹித் சர்மா, தேஷ்பாண்டே, லலித் யாதவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here