Saturday, April 20, 2024

கொரோனா தடுப்பூசி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தானா?? – அதிர்ச்சி தகவல்!!

Must Read

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவ ஆரம்பித்தது. இதனால் தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான உலக மக்கள் மரணம் அடைத்துள்ளனர். இந்த நோய் பரவல் குறைவதாக இல்லை. இதனால் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனவிற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கடந்த சில நாட்களுக்கு முன் தான் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி சோதனையில் ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் எதிர்பார்த்த இந்த தடுப்பூசி சோதனை நிறுத்திவைக்கப்பட்டது அனைவரையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனவிற்கான தடுப்பூசி கிடைக்க இன்னும் 5 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்று தெரிவித்துள்ளார் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா.

சீரம் நிறுவனம்:

அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்துடன் தான் இந்தியாவின் சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அங்கு சோதனை நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவிலும் சோதனைகள் நடைபெற கூடாது என்று இந்தியா மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2020 கோப்பை இந்த அணிக்கு தான்!!

இது குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா கூறுகையில் “ரஷ்யா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உலக மக்கள் அனைவர்க்கும் தேவையான தடுப்பூசிகள் வரும் 2024 ஆம் ஆண்டில் கிடைக்குமா? என்பது கேள்வி தான். தற்போது உள்ள சூழ்நிலையில் குறைந்தபட்சம் இன்னும் 5 வருடங்கள் வரை கூட ஆகலாம்.” என்று கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் இப்படி ஒரு செய்தி மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளுக்கு ஷாக்., ரூ.1,000 உரிமைத் தொகை விரிவுபடுத்தப்படுமா? விசிக திருமாவளவன் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, 'கலைஞர் மகளிர்' திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் சுமார் 1.15 கோடி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -