அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மீண்டும் முழு ஊரடங்கு – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

0

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வாறு இல்லை என்றால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதை தவிர வேறு வழிகள் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலாஜா தெரிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கொரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா தான். இருப்பினும் அம்மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தொற்று பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஐநா விருதும் கேரளாவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாகவே உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியது. இதனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலாஜா கூறியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்ப நாட்களில் நோய் பரவுதலைக் குறைத்த மாநில அரசு, ஓணம் பருவத்தில் மக்கள் அனைத்து கொரோனா விழிப்புணர்வையும் விட்டுவிட்டு, தெருக்களில் இறங்கி கொண்டாடிய காரணத்தால் கொரோனா தொற்று விகிதம் 12% வரை உயர்ந்துள்ளது. மக்கள் அதிக விழிப்புணர்வைக் கடைப்பிடித்து, அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் வரும் நாட்களில் கண்டிப்பாக கடைபிடித்தால் நோய் பரவுதல் குறைக்கப்படலாம் என்று அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.

20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிகபட்ச எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் வெளியில் செல்லும் இளைஞர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கேரளாவில் 72% இறப்புகள் 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்துள்ளது. மேலும் 28% உயிரிழப்புகள் இளம் வயதினர் ஆவர்.

இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்றவற்றை முறையாக பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்று இந்த வேகத்தில் தொடர்ந்தால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேண்டி இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here