அக்.1 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி – மாநில அரசு அதிரடி!!

0

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அடுத்த மாதம் முதல் (அக்டோபர்) சினிமா தியேட்டர்கள் செயல்பட மேற்கு வங்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்க அனுமதி கோரி உரிமையாளர்கள் கோரி வந்த நிலையில், முதல் மாநிலமாக மேற்கு வங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தியேட்டர்கள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதலே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜா திருவிழாவிற்கு முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக மாநிலத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

West Bengal CM
West Bengal CM

நாடகங்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகள் போன்ற பிற கலாச்சார நிகழ்வுகளும் அக்டோபர் 1 முதல் அதிகபட்சம் 50 நபர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நலிவடைந்த கலைத்துறையை மீட்டெடுக்கும் முயற்சியை எடுத்த முதல் மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலம் – சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை!!

இருப்பினும் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் சுமார் ரூ. 3,000 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

Theatres
Theatres

விமான போக்குவரத்து மற்றும் மால்கள் போன்றவை செயல்பட ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், 20 லட்சத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நம்பி இருக்கும் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கக்கோரி கடந்த சில வாரங்களாக திரையரங்க உரிமையாளர்கள் கோரி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here