படவாய்ப்பு கிடைக்காததால் புதிய தொழிலில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ் – நீங்க போயிட்டா சினிமா என்னாகுறது??

0
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு - ரசிகர்கள் பலத்த கண்டனம்!!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு - ரசிகர்கள் பலத்த கண்டனம்!!

வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தான் தொடங்க இருக்கும் புதிய தொழில் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ தான் இவரது முதல் படம். அடுத்தடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பட்டையை கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இப்படி சினிமாவில் சாதித்து கொண்டே சென்ற கீர்த்தி சுரேஷ் திடீரென ஒர்க்அவுட் செய்கிறேன் என்ற பெயரில் உடல் எடையை மொத்தமாக குறைத்து விட்டார்.

இதில் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது ஓரளவிற்கு தேறி வந்துள்ள கீர்த்தி சுரேஷ் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் அவருக்கு பல படங்கள் வெளியிட்டுருக்காக காத்து கொண்டுள்ளது.

இந்நிலையில் சினிமாவை தவிர்த்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார் கீர்த்தி. அதாவது காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் பூமித்ரா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த செய்தியை கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here