அட…மெல்ல நட… மெல்ல நட.. மேனி என்னாகும்… நயன்தாரா ரேஞ்சுக்கு கெத்து காட்டி நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!

0

விஜய் டிவியின் பேமஸ் சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அதில் சியான் விக்ரம் அவர்களின் அந்நியன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் பின்னணி இசைக்கு ஒய்யாரமாக நடந்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன், அண்ணி, தம்பிகள் அவர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பை காட்டி மக்களின் பேராதரவோடு கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் கதை அமைப்பு ஒரு சில திரைப்படங்களின் சாயலாக இருப்பதாக சீரியல் ஒளிபரப்பான ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், நாளாக நாளாக அந்த சீரியலோடு ஒன்ற ஆரம்பித்து விட்டனர்.

மேலும் தற்போது அந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் தற்போதைய கதையாக வீட்டின் கடைசி தம்பியான கண்ணன், ஐஸ்வர்யாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதால் கலகலப்பாக மகிழ்ச்சியாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது கவலை மற்றும் துயரத்தில் ஆழ்ந்து உள்ளது.

இந்நிலையில் இதில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அந்நியன் படத்தில் இடம் பெற்ற காதல் யானை என தொடங்கும் பாடலுக்கு ஒய்யாரமாக நடைபோட்ட படி உள்ளார். இந்த வீடியோ தற்போது எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here