அய்யயோ பார்வையால கொல்றீங்களே… அப்படி உங்ககிட்ட என்ன தான் இருக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவின் கலக்கல் போட்டோஸ்!!!

0

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆட்கொண்டவர் காவ்யா. இவர் தற்போது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் சுடிதாருடன் பார்வையால் ரசிகர்களை சாய்த்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் இரவு 8 மணியளவில் ஒளிபரப்படுகிறது. அண்ணன், தம்பிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் வாழ வரும் மருமகள், அதை சார்ந்து ஏற்படும் பிரச்சனைகள், அனைத்தையும் சமாளித்து குடும்பம் பிரியாமல் பாதுகாக்க போராடும் அண்ணன்,அண்ணி என கதை நகர்கிறது. இந்த சீரியலின் தற்போதைய கதையாக கடைக்குட்டி தம்பி கண்ணன் காதல் விவகாரம் பற்றிய விறுவிறுப்பான கதை நடைபெற்று வருகிறது.

இந்த சீரியலில் மூர்த்தியின் இளைய தம்பி கதிரின் மனைவி முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார். இவர் குறும்படங்கள் மூலம் பிரபலமானவர். இந்த படங்கள் வாயிலாக அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சீரியல். இவர் முதலில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் விஜய் டிவிக்கு வந்தார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா மரணம் அடைய அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

காவியா சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருப்பவர். இந்நிலையில் அவ்வப்போது சமூக தளங்களில் தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் பார்வையாலேயே ரசிகர்களை மயக்கும் அளவிலான ஒரு போட்டோவை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here