மகளுக்கே டஃப் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலத்தின் அம்மா.. யாரை ரசிப்பது என்று தெரியாமல் குழம்பிய ரசிகர்கள்!!

0

சீரியலில் சின்ன ரோல்களில் நடித்து தான் இன்ஸ்டாவில் பதிவிடும் 4 மணி போட்டோஷூட்கள் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியவர் ஷிவானி நாராயணன்.

சினிமா மீது உள்ள ஆர்வத்தால் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தன் சின்ன திரை பயணத்தை ஷிவானி தொடங்கினார். அதன் பின் பகல் நிலவு சீரியலில் கதாநாயகி வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

 

அந்த சீரியலில் அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண்ணாக ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தவர், அல்ட்ரா மாடர்ன் உடையில் இவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வியர்த்து விறுவிறுத்துப் போனார்கள்.

அவர் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்களால் கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். அந்நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஷிவானி உருப்படியாக எதையும் செய்யாமல் பாலாவுடன் கடலை போடுவதிலேயே நேரத்தை செலவிட்டார். சிறுது காலம் அந்நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து குறைந்த ஓடுகளால் எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இன்ஸ்டாவில் கண்டமேனி கவர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 1 அன்று நண்பர்கள் தினம் என்பதால் தன் அம்மாவுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் கூட அரை ட்ரவுசரை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானி அம்மாவிற்கும் ரசிகர்கள் இருப்பதால், ரசிகர்கள் ஷிவானி அம்மாவுடன் பதிவிட்ட இந்த புகைப்படத்தை பார்த்து யாரை ரசிப்பது என்று தெரியமால் குழம்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here