மலையாள டீச்சராக மாறிய அன்பே வா சீரியல் நாயகி… கத்துக்கிறது யாருன்னு தெரியுமா!!

0

வெள்ளித்திரையில் முகம் காட்டி அதன் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் டெல்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது அன்பே வா சீரியல் கதாநாயகன் வருணுக்கு மலையாள மொழியை டான்ஸ் மூலம் கற்பிக்க முயல்கிறார். இந்த வீடியோ உடன் சேர்ந்து ஒரு கேப்சன் வைத்து உள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை டெல்னா. அடிப்படையில் இவர் ஒரு கிளாசிக்கல் டான்சர் ஆவார். விடியும் வரை பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர். அதை தொடர்ந்து பட்ரா, 49-O போன்ற அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இருப்பினும் இவர் நன்கு பரிச்சியமானது குரங்கு பொம்மை படம் தான். எனினும் அவருக்கு திரைப்படத்தில் அந்த அளவிற்கு மார்க்கெட் கிடைக்கவில்லை.

அப்போது அவருக்கு வந்த வாய்ப்பு தான் சன் டிவி அன்பே வா சீரியல். அதில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக விராட் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியல் தொடங்கிய நாள் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியலில் வரும் பூமிகா கதாபாத்திரம் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டது.

இந்நிலையில் இவர் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வது வழக்கம். மேலும் இவரின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் தற்போது தன்னுடைய ரீல் ஜோடி வருணுக்கு மலையாள பாடல் மூலம் மலையாள மொழியை கற்றுக் கொடுக்கிறார். அந்த வீடியோவில் டெல்னா மற்றும் வருண் சோபாவில் அமர்ந்து இருக்க உட்காந்த படி மலையாள பாடலுக்கு பாவனைகளுடன் கற்பித்து கொடுக்கிறார்.

மேலும் அதனோடு சேர்த்து ‘மலையாளத்தை வார்த்தைகள் மூலம் கற்றுக் கொடுக்க முயன்று முடியவில்லை, அதனால் மலையாள பாடல் மூலம் கற்றுக்கொடுக்க முயல்கிறேன்’, என்பது போன்ற  கேப்சனை பதிவிட்டு உள்ளார்.இந்த வீடியோவில் அவரின் கியூட் எஸ்ப்பிரசன் பார்த்து ரசிகர்கள் கிறக்கத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here