“குக் வித் கிறுக்கு” நிகழ்ச்சியில் பங்கேற்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்திருந்த பிரபலம் கன்னடத்தில் தற்போது ஒளிபரப்பாக இருக்கும் “குக் வித் கிறுக்கு” நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

குக் வித் கிறுக்கு

மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியினை அடிப்படையாக கொண்டு பல மொழிகளில் இந்த நிகழ்ச்சிகளை எடுக்க இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது கன்னடத்தில் “குக் வித் கிறுக்கு” என்ற பெயரில் நிகழ்ச்சியினை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடிக்க முதலில் ஒப்பந்தமாகிய நடிகை கவிதா கவுடா பங்கேற்க உள்ளாராம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடந்த முடிவா?? பள்ளி கல்வித்துறை தீவிர ஆலோசனை!!

இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நீலி” என்ற சீரியலில் இவர் வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியலில் இவர் நன்றாக நடித்த இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் நடித்ததற்காக இவருக்கு “சிறந்த வில்லி” என்ற விருதினை விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் கொடுத்து கௌரவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, இவர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால், இவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த காரணத்தால் இவரால் அந்த சீரியலில் நடிக்க இயலாமல் போய் விட்டது. சமீப நாட்களுக்கு முன்பாக தான் இவருக்கு நிச்சயம் நடைபெற்றது. தற்போது இவர் கன்னட மொழியில் ஒளிபரப்பாக இருக்கும் “குக் வித் கிறுக்கு” நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here