தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள்:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பல தடுப்பு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் பல தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளனர். இதில் தியேட்டரில் 50% இருக்கைகள், கோவில் போன்ற மத சார்ந்த திருவிழாவிற்கு தடை என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் அனைத்து மாவட்டங்களில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் போன்றவற்றை கேட்டு வருகிறார். தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடந்த முடிவா?? பள்ளி கல்வித்துறை தீவிர ஆலோசனை!!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 10ம் தேதி வரை 37.80 லட்ச பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது போதுமான அளவிற்கு தடுப்பூசி இருப்பு உள்ளது. சந்தை, கடைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here