இதோ வந்துட்டாருல்ல நடன புயல் – ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் வார்னர்!!

0

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான வார்னர் அவ்வப்போது சினிமா பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருவார். தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு வார்னர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாத்தி கம்மிங்:

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா நோய் தொற்றிற்கு பின்பு மக்கள் அனைவரையும் திரையரங்கிற்கு வரவைத்த திரைப்படம் தான் மாஸ்டர். அந்த அளவிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ‘வாத்தி கம்மிங்’ என்னும் பாடல் உலகம் முழுவதும் உள்ள மக்களை குத்தாட்டம் போட வைத்து வருகிறது. இந்த பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனம் ஆடி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர் நடனமாடியுள்ளார். இந்திய மக்கள் அனைவரையும் தனது நடனத்தால் கவர்ந்தவர் தான் வார்னர். இவர் அவ்வப்போது சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

ரிக்கி பாண்டிங்கின் ட்ரீம் டீம் – ஒரே ஒரு இந்தியர் மட்டுமே தேர்வு!!

இவரது நடனத்திற்கே இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக அவர் இந்திய வந்துள்ளார். இங்கு வந்த அவர் மீண்டும் தனது நடன வேலைகளை தொடங்கியுள்ளார். அதன்படி அவர் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது சக அணியினர் புவனேஷ்வர் மற்றும் ரஷீத் கான் உள்ளிட்டவர்களுடன் வார்னர் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here