
காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது அனல் பறக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்த கல்லூரி பேரவை தேர்தல் முடிவு வந்துள்ளது. அதில் அபி இதில் வெற்றி பெற்றார் என சூர்யா அறிவித்தார். ஆனால் இதற்கான பதவி பிரமாணத்தின் போது வெற்றியாளர் அபி என்று அழைப்பதற்கு பதிலாக வெண்ணிலா என சூர்யா அழைக்க அதைக் கேட்ட மீனாட்சி ஆத்திரத்தில் சூர்யாவை கடும் சொற்களால் பேசுகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பின் சூர்யா அபி லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்கியதை அம்பலப்படுத்துகிறார். மேலும் காசு வாங்கிட்டு ஓட்டு போடுபவர்களை இந்த சமுதாயம் எவ்வாறு பார்க்கும் என்று அனைவருக்கும் உணர்த்துகிறார். இவரின் இந்த பேச்சை கேட்ட சாரதா, வெண்ணிலா, அங்கிருந்த மாணவர்கள் வியந்து பார்க்கின்றனர்.
ஆஸ்கார் 95 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா.., வெற்றியாளர்கள் முழு லிஸ்ட் உள்ளே!!
இப்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோட் அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் அபி செய்த தவறை காட்டி கொடுத்து வெண்ணிலாவுக்கு ஆதரவாக பேசியதால் கடும் கோபத்தில் இருக்கும் மீனாட்சி சூர்யாவை என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை. அதற்கு சூர்யாவும் சரியான பதிலடி கொடுப்பாரா என்று பார்க்கலாம்.