ICC: பிப்ரவரி மாதத்திற்கான “player of the month” விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!

0
ICC: பிப்ரவரி மாதத்திற்கான
ICC: பிப்ரவரி மாதத்திற்கான "player of the month" விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!

ஐசிசி சார்பாக மாதந்தோறும் வழங்கப்படும் “player of the month” விருதை, பிப்ரவரி மாதத்திற்கு இங்கிலாந்து வீரரும், ஆஸ்திரேலிய வீராங்கனையும் வென்றுள்ளனர்.

ஐசிசி விருது:

ஐசிசியானது ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரின் 3 வடிவிலும் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து, “player of the month” என்ற பெயரில், விருது வழங்கி வருகிறது. இந்த வகையில், பிப்ரவரி மாதத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஒரு சதம் 2 அரைசதம் உட்பட 335 ரன்களை குவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், ஆடவருக்கான “player of the month” விருதினை இங்கிலாந்தின் ஹாரி புரூக் தட்டிச் சென்றுள்ளார். இதே போல, பிப்ரவரி மாதத்தில் மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணியானது 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

ஆஸ்கார் 95 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா.., வெற்றியாளர்கள் முழு லிஸ்ட் உள்ளே!!

இந்த ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், பயிற்சி போட்டி மற்றும் டி20 உலக கோப்பை இரண்டையும் சேர்ந்து, 137 ரன்களும் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம், ஆஷ்லே கார்ட்னர் மகளிருக்கான “player of the month” விருதை தட்டி சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here