5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேர்வு நடைமுறை., அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!!

0
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேர்வு நடைமுறை., அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!!
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேர்வு நடைமுறை., அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!!

மாநிலம் முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்த அரசின் உத்தரவுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உயர்நீதிமன்றம் தடை :

மாநிலங்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதனைப் பின்பற்றி, மாநிலம் முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரிய தேர்வு நடத்த, மாநில அரசு முடிவு செய்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அரசு இந்த முடிவை மேற்கொள்ள பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும், அவசர அவசரமாக இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் வாதிடப்பட்டது. இதுகுறித்து பேசிய அரசு தரப்பு, மாணவர்களுக்கு வழக்கமாக 80% மதிப்பெண்கள் இதுவரை பின்பற்றி வந்த நடைமுறையில் வழங்கப்படும் என்றும், புதிதாக 20% மதிப்பெண்களுக்கு மட்டும் வாரியத் தேர்வு நடத்தப்படும் எனவும் வாதிட்டது.

தமிழக ரேஷன் கடைகளுக்கு ரூ.5104 கோடி வரை நெல் கொள்முதல்., லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி!!!

இது குறித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசின் இந்த உத்தரவு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை (RTE) மீறுவதாகவும், முறையாக சட்டம் இயற்றப்படாத எதையும் அரசு கொண்டு வர முடியாது எனவும் தெரிவித்து, வாரியத் தேர்வு நடைமுறைக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here