
நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகர் ஒருவர் களமிறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
LEO திரைப்படம்
தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் பட டைட்டிலுடன் வெளியான வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹைப்பை ஏற்படுத்தியது. அதுபோக இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
உயர்தர கேமராக்கள் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகர் இணைந்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் ராஷ்டிரகூட அரசனாக நடித்த நடிகர் பாபு ஆண்டனி நடிக்க இருக்கிறார்.
மீண்டும் ஆரம்பமான அதிதியின் ஆட்டம்.., அம்மணிய இனி கைலயே பிடிக்க முடியாது!!!
இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஒருவேளை இப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இத்தனை வில்லன்களை வைத்து பார்க்கும் பொழுது விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரிகிறது. எனவே லியோ படம் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்க போகுது.