தமிழக ரேஷன் கடைகளுக்கு ரூ.5104 கோடி வரை நெல் கொள்முதல்., லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி!!!

0
தமிழக ரேஷன் கடைகளுக்கு ரூ.5104 கோடி வரை நெல் கொள்முதல்., லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி!!!
தமிழக ரேஷன் கடைகளுக்கு ரூ.5104 கோடி வரை நெல் கொள்முதல்., லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நியாய விலை கடை

தமிழகம் முழுவதும் சுமார் 35,000 ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மலிவு விலையில் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் புலம்பெயர்ந்த நுகர்வோர்களுக்கு “ஒரே நாடு ஒரே கார்டு” திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

எனவே கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 3.27 லட்ச விவசாயிகளிடமிருந்து 25.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு பாதுகாப்பு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பேசுகையில், இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5104 கோடி வரை கொள்முதல் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மக்களை அலையவிடாமல் கடை ஊழியர்கள் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு சளைத்தவர் இல்லை பெண்கள்…, நடிகை ரோகினி அதிரடி பேச்சு!!

அதேபோல் நுகர்வோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரேஷன் பொருட்களை வழங்க வேண்டுமே தவிர விற்பனை ஆகாத பொருளை வாங்க சொல்லி வற்புறுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் புலம்பெயர்ந்த நுகர்வோர்களுக்கு மாத இறுதியில் வழங்குவதை தவிர்த்து உடனடியாக உணவுப்பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். அதேபோல் சுமை தூக்கும் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தரம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here