கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற விஷால் – என்ன பண்ணி இருக்காரு பாருங்களே!!

0

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற நடிகர் விஷால் அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

நேரில் அஞ்சலி:

கன்னட திரையுலகில் புகப்பெற்ற நடிகராக விளங்கியவர் நடிகர் புனித் ராஜ்குமார். மாரடைப்பு காரணமாக சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது மறைவு திரை உலகில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் இறப்பதற்கு முன் மிகப்பெரிய சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

அதிலும் குறிப்பாக அவர் இறந்த போது செய்த கண் தானம் மற்றும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை தாம் ஏற்று  வழி நடத்தியது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு பிறகு அந்த மாணவர்களின் மொத்த கல்விச் செலவையும் இனி தாம் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்தார். இந்த நிலையில், தற்போது அவர் வீட்டிற்கு சென்றுள்ள விஷால், அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here