பிரபல கமல் பட நடிகர் திடீர் மறைவு – தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

0
பிரபல கமல் பட நடிகர் திடீர் மறைவு - தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!
பிரபல கமல் பட நடிகர் திடீர் மறைவு - தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த பிரபல  நடிகர் சக்கரவர்த்தி, மும்பையில் இன்று காலை, தனது 62வது வயதில் உயிரிழந்துள்ளார்.

நடிகர் மறைவு:

80ஸ் காலத்தில், கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சக்கரவர்த்தி. இவர் நடிகர் சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். 1970 முதல் இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். தனியார் தொலைக்காட்சியில், பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக பணியாற்றி வந்தார். இன்று காலை, மாரடைப்பு காரணமாக 62-வது வயதில் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கத்திலேயே இவர் உயிரிழந்த சோகத்தை கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை அடுத்து, திரைப் பிரபலங்கள் பலரும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here