கொரோனவால் துன்பப்படும் போது புதிதாக பாராளுமன்றம் யாருக்காக?? – கமல் காரசார ட்வீட்!!

0

மக்கள் பசியில் வாடும்போது 1000 கோடி ரூபாயில் பாராளுமன்ற கட்டிடம் எதற்கு?? கமலஹாசன் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படியாக அவர் பாதிவிட்டிருப்பதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடம்:

பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1921 ல் அடிக்கல் நாட்டப்பட்டு ,1927 ல் திறக்கப்பட்ட நமது பாராளுமன்ற கட்டிடமானது கிட்டத்தட்ட 100 வருட பாரம்பரியத்தை கொண்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட கட்டிடத்தின் அருகிலேயே 971 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடத்தை கட்ட மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2022 ல் நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பு, எதிர்காட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி முடிக்க தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகின்றது.

கமலஹாசன் கேள்வி :

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் ” சீனப்பெருஞ்சுவர் காட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களை காக்கத்தான் இந்த சுவர் என்றார்கள் மன்னர்கள்”

‘சூரரை போற்று படம் சுத்த பிளாப்’ – சூர்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்!!

“கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ஆயிரம் கோடியில் பார்லிமென்ட் கட்டுவது யாரைக்காக்க ?? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே” என பதிவு செய்துள்ளார். தற்போது இந்த பதிவு பல கோணங்களில் இருந்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here